ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை சந்தித்தார் சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது,வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய ஆளுநராக சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முதல் தடவையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *