சாலையில் பல்டி அடித்த கார்….வாகனச் சாரதி படுகாயம்! samugammedia

கொழும்பிலிருந்து – திருகோணமலை நோக்கி பயணித்த கார் ஒறு தடம் பிரண்டு விபத்துக்குள்ளானதில் குறித்த வாகனச் சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இவ்விபத்தானது திருகோணமலை-மொறவெவ வில்கம் விகாரைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.இதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மூதூர் பகுதியைச் சேர்ந்த வாகனச் சாரதி காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் 1990 என்ற  நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *