நச்சுத்தன்மையான மீன் உண்டதால் அடுத்தடுத்து உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் சோகம் samugammedia

நச்சுத்தன்மை கொண்ட மீனை உட்கொண்டதால் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

மாங்காடு கட்டுப்பிள்ளையார் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய தில்லையம்பலம் யூசைமலர் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் நச்சுத் தன்மை கொண்ட மீனை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி, அவரது 3 வயதுடைய மகன் அஸ்வின், அவரது தாயாரான யூசைமலர், சகோதரன் 20 வயதுடைய கிறிஸ்ரின் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி என்பவர் உயிரிழந்ததுடன் அவரது தாயார் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *