காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் கொலை முயற்சி..! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்! samugammedia

பத்தரமுல்ல கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் தலைவரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் தலைவரும் பிரதான சந்தேக நபருமானவரின் நிதி மோசடிகள் வெளிப்பட்டதன் காரணமாகவே அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குற்றத்தின் பிரதான சந்தேக நபர் மாத்தறை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எனவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மற்றைய சந்தேக நபர்களில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர், பஸ் ஒன்றின் உரிமையாளர் மற்றும் பஸ் நடத்துநர் ஆகியோர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *