கொலை செய்து விட்டு வாளினை தலையில் வைத்துச் சென்ற கொலையாளி..!பொலிசார் அதிர்ச்சியில்.!samugammedia

காலி மாவட்டத்தின் அக்மீமன, கபுஹெம்பல பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த நபரின் தலையை வாளினால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கபுஹேம்பல கட்டுஹேனாவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திலிப் நாணயக்கார என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் மாடியில் உள்ள அறையொன்றில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை நான்கு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர், அவரை தலையில் சரமாரியாக வெட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த நபரின் தலையில் கத்தியை வைத்து கொலையாளி தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *