தாயின் சடலத்தை பயணப் பெட்டியில் வைத்து பொதி செய்த பெண்

பெண்ணொருவர்  தனது தாயைக் கொன்று அவரது  சடலத்தை பயணப் பெட்டியொன்றில் வைத்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்ற சம்பவம் பெங்களூரில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று 35 வயதான  குறித்த பெண்ணுக்கும் அவரது தாயாருக்கும்  இடையில் வாக்குவாதமொன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் தனது தாயாரைக் கத்தியால் பலமுறை கொடூரமாகத் தாக்கியுள்ளதோடு அவருக்கு சில  மாத்திரைகளையும் வலுக்கட்டாயமாகக் கொடுத்துள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது சடலத்தை ஒரு பயணப் பெட்டியொன்றுக்குள் வைத்து பொதி செய்து  பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளதோடு இது குறித்த மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *