அறிமுகமாகும் பறக்கும் தட்டு

மனிதர்கள் பயணிக்கக் கூடிய முதல் மின்சார பறக்கும் தட்டினை சீனாவைச் சேர்ந்த நிறுவனமொன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இப்பறக்கும் தட்டானது 200 மீற்றர் உயரம் வரை பறக்கும் எனவும் நிலத்திலும், நீரிலும் செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது சுற்றுலா, விளம்பர நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படும் இவ்வாகனம், விரைவில் பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *