மூதாட்டியின் சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தத்தால் பரபரப்பு

மூதாட்டி ஒருவரின் சடலம் அடைக்கப்பட்ட சவப்பெட்டி யொன்றில் இருந்து மூச்சு விடும் சத்தம் கேட்ட விநோத சம்பவமொன்று ஈகுவெடோரில் இடம்பெற்றுள்ளது.

ஈகுவெடோரில் உள்ள பபாஹோயோ என்ற நகரில் பெல்லா மொன்டோயா (Bella Montoya )என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார்.

பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என அவரைப்  பரிசோதித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கின் போது, அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக சவப்பெட்டியைத் திறந்துள்ளனர்.

இதன் போது அவர் மூச்சு விட சிரமப்படுவதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *