தாயால் கைவிடப்பட்ட ஒன்பது மாத குழந்தை மற்றும் ஒன்பது வயது சிறுவனை, முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஒரு பெண் தன் பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைத்து சிறிது நேரம் அவர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றதாகவும் வெகு நேரம் கழித்தும் அந்தப் பெண் திரும்பி வராததால், சிறுவர்களை பொலிஸில் ஒப்படைக்க தான் தீர்மானித்ததாகவும் குறித்த சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
The post அம்பலாங்கொடையில் கைவிடப்பட்ட குழந்தைகள்: பொலிஸாரிடம் ஒப்படைப்பு appeared first on Tamilwin Sri Lanka.
