சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ரஷ்ய மொழிப் பயிற்சி! samugammedia

தென் மாகாணத்தில் உள்ள சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு  ரஷ்ய மொழியை கற்பிக்கும் பாடநெறி காலி கோட்டை பொலிஸ் சேவை பயிற்சி நிறுவனத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அனுசரணையில் இந்தப் பயிற்சி நெறி நடத்தப்படுகிறது.

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் இரண்டாவது அதிகாரியான மரிய எல் போபோவா உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டது.

தற்போது தென் மாகாணத்துக்கு  ரஷ்ய பிரஜைகள் அதிக எண்ணிக்கையில்  வருகை தருவதுடன் சில சமயங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுவதுடன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படக் கூடிய மொழிப் பிரச்சினையினால் தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் வகையில் இந்த ரஷ்ய மொழி பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *