பதவியை இழக்கவுள்ள அலி சப்ரி ரஹீம்..! போர்கொடி தூக்கியுள்ள 30 எம்.பிக்கள்.!samugammedia

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்க்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

அத்துடன் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒழுக்க விதிகளின் கீழ் விசாரணை நடாத்தப்பட வேண்டுமென 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தனர்.

இதேவேளை அலி சப்ரி ரஹீம் கடந்த மாதம் 25 ஆம் திகதி இரவு, துபாய் சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையம் தகவல் தெரிவிக்கிறது.

25ஆம் திகதி இரவு 8.50 மணியளவில் துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர் புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏழரை கோடி பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசியுடன் சட்ட விரோதமான முறையில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்தபோது கடந்த மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுஇ 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *