தமிழர் பகுதியில் பரிதாபம்..! மேசன் வேலையில் ஈடுபட்ட இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!samugammedia

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி பகுதியில் கவனயீனம் காரணமாக மேசன் வேலையில் ஈடுபட்டுவந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை அமிர்தகழி கப்பலேந்தியா மாதா கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு ஒன்றில் நிர்மாணப்பணியின்போது பிரதான மின்சார இணைப்பில் தகடு இணைந்திருந்ததை கவனிக்காத நிலையில் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கவனயீனம் காரணமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியை சேர்ந்த மேசன் வேலையில் ஈடுபடும் இருவரே உயிரிழந்துள்ளனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *