அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டுவிட்டர்

 

உலக செல்வந்தர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) கடந்த வருடம்  டுவிட்டரைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் டுவிட்டரைக் கைப்பற்றியதிலிருந்து எலோன் மஸ்க் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றார்.

அந்தவகையில் அண்மையில் டுவிட்டரின் தலைமை நிர்வாகியாக லிண்டா யாகரினோ என்ற பெண்ணை நியமித்தார்.

இந்நிலையில் தற்போது லிண்டா யாகரினோ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டுவிட்டரை உலகின் மிக துல்லியமான நிகழ்நேர தகவல் ஆதாரமாக மாற்றும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *