பாம்பால் வெடித்த மோதல்

சிறுவர் விளையாடிய பிராங்க் விளையாட்டால் 3 குடும்பங்களுக்கு இடையே மோதல் வெடித்த சம்பவம் பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சிகார்பூர் பகுதியில் உள்ள பபாத் என்ற கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில் குறும்புத்தனமாக பிராங்க் செய்ய ஆசைப்பட்ட அச் சிறுவர்கள், கையில் இருந்த பொம்மை பாம்பை அங்கு தெருவில் நடந்து செல்லும் நபர்கள் மீது தூக்கி வீசி பயம் வரவழைத்து அதை ஜாலியாக ரசித்துள்ளனர்.

அப்படி, ஒரு பெண் மீது சிறுவர்கள் பொம்மை பாம்பை தூக்கி வீசவே அவர் பீதியில் பயங்கரமாக கத்தி அலறியுள்ளார். இதைக் கேட்டு அந்த பெண்ணின் வீட்டார் பதறிப்போய் வெளியே ஓடி வந்துள்ளனர். அதைப் பார்த்து சிறுவர்கள் ஓடிப்போய் மறைந்துகொண்டனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார் ஆத்திரத்தில் விளையாடிய சிறுவனின் வீட்டிற்குள் சென்று அவரது பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாகி பெரும் சண்டையாக வெடித்துள்ளது. அங்கிருந்த மூன்று வீட்டாரும் கற்கள், கம்புகளைக் கொண்டு அடித்து உதைத்து சண்டை போட்டுள்ளனர். இதில் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்தமான பைக், கார், வீடு போன்றவை உடைக்கப்பட்டன. மேலும், இச் சண்டையில் 5 பேர் காயம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *