திருமணத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்டோர் பலி

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவாரா  பகுதியில்  திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு நேற்றைய தினம் அதிகாலை படகில் வீடு திரும்பியவர்களே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்தில் 100 பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனத் தெரிவித்த  நைஜீரிய அதிகாரிகள் பலரைக் காணவில்லை எனவும் அவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தாம்  ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே  இவ்விபத்துக்கான காரணம் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *