தங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் காட்டுயானைத் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி செங்கலடி பதுளை வீதியை அண்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் புதன்கிழமை (14) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்ட பேரணியில் செங்கலடி பதுளை வீதியை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செங்கலடி பதுளை வீதி சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி பிரதான வீதியூடாக சென்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக முன்றலில் முடிவடைந்தது. ஆங்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரமிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையம் அழிக்கும் காட்டு யானைகளுக்கு தீர்வு வேண்டும் எங்களின் உறவுகளை இழந்தது போதும் உடமைகளை இழந்தது போதும் அரசே உடனடித் தீர்வு வேண்டும் எங்களை காப்பாற்று அரசே கூடிய விரைவில் முடிவெடு யானைகளிடமிருந்து எங்களைக் காப்பாற்று யானகளை வெளியேற்;று எங்களுடைய நெல் சோளன் தானியவகைகளை சேமித்து வைக்க முடியாமல் அழிக்கிறது. அரசே யானைகளை சரணாலத்துக்கு கொண்டு எங்களை காப்பாற்று அறுவடை நேரத்தில் வயல்களை அழிக்கிறது யானையால் வீடு வாசல் இழக்கிறோம் அரசே எங்களைக் காப்பாற்று போன்ற வாசகள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் கோரங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் – கடந்த கால யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட நாங்கள் படிப்படியாக வாழ்வாத்ததை ரீதியில் முன்னேற்றமடைந்து வரும் நிலையில் காட்டு யானைகள் எமது வாழ்வாதாரத்தை அழிக்கின்றன. நெல் வெளாண்மை அறுவடை செய்யும் காலத்தில் வெளாண்மையை அழிக்கின்றன சோளன் பயிரை அழிக்கிறது இதனால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம். யானையின் தாக்குதலில் பல உயிர்களை பறிகொடுத்துள்ளோம் உடமைகள் இழக்கப்பட்டுள்ளன. இதற்கான சரியான தீர்வினை அரசாங்கம் எடுக்க வேண்டும் யானை வேலி யானை வெடியினால் எவ்வித பயனும இல்லை. குறித்த யானைகளை வேறு இடங்களிலிருந்து எமது பிரதேசத்திற்கு இரவோடு இரவாக கொண்டுவந்து விடப்பட்டுள்ளனவா என்ற சந்தேகமும் எமக்குள் எழுந்துள்ளன என கருத்து தெரிவித்தனர்.

பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆர்பாட்டகாரர்கள் மத்தில் கூறுகையில் – பதுளை வீதியை அண்டியுள்ள கிராம மக்கள் நீண்ட காலமாக விவசாயம் மற்றும் வாழ்வாதார தொழிலில் ஈடுபடும்போது யானைகளினால் பாதிப்புக்குள்ளாகி வருவதை நாம் அறிவோம். முடிந்தளவு அதனை தடுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்த போதிலும் கட்டுப்படுத்த முடியவில்லை அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தந்துள்ளார்கள் இது தொடர்பாக உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு அகஜர்களை அனுப்பி எதிர்காலத்தில் அந்த மக்களை பாதுகாப்பதற்காகவும் வாழ்வாதாரததை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்கப்படும் என்றார். செங்கலடி பதுளை வீதியை அண்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் புதன்கிழமை (14) ஆர்ப்பாரட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்ட பேரணியில் செங்கலடி பதுளை வீதியை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் கந்துகொண்டனர்.
செங்கலடி பதுளை வீதி சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி பிரதான வீதியூடாக சென்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக முன்றலில் முடிவடைந்தது. ஆங்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரமிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையம் அழிக்கும் காட்டு யானைகளுக்கு தீர்வு வேண்டும், எங்களின் உறவுகளை இழந்தது போதும் உடமைகளை இழந்தது போதும், அரசே உடனடித் தீர்வு வேண்டும் எங்களை காப்பாற்று, அரசே கூடிய விரைவில் முடிவெடு யானைகளிடமிருந்து எங்களைக் காப்பாற்று, யானகளை வெளியேற்று எங்களுடைய நெல், சோளன், தானியவகைகளை சேமித்து வைக்க முடியாமல் அழிக்கிறது, அரசே யானைகளை சரணாலத்துக்கு கொண்டுபோ, எங்களை காப்பாற்று, அறுவடை நேரத்தில் வயல்களை அழிக்கிறது யானையால் வீடு வாசல் இழக்கிறோம், அரசே எங்களைக் காப்பாற்று போன்ற வாசகள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் கோரங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் – கடந்த கால யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட நாங்கள் படிப்படியாக வாழ்வாத்ததை ரீதியில் முன்னேற்றமடைந்து வரும் நிலையில் காட்டு யானைகள் எமது வாழ்வாதாரத்தை அழிக்கின்றன. நெல் வெளாண்மை அறுவடை செய்யும் காலத்தில் வெளாண்மையை அழிக்கின்றன சோளன் பயிரை அழிக்கிறது. இதனால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம். யுhனையின் தாக்குதலில் பல உயிர்களை பறிகொடுத்துள்ளோம் உடமைகள் இழக்கப்பட்டுள்ளன. இதற்கான சரியான தீர்வினை அரசாங்கம் எடுக்க வேண்டும் யானை வேலி யானை வெடியினால் எவ்வித பயனும இல்லை. குறித்த யானைகளை வேறு இடங்களிலிருந்து எமது பிரதேசத்திற்கு இரவோடு இரவாக கொண்டுவந்து விடப்பட்டுள்ளனவா என்ற சந்தேகமும் எமக்குள் எழுந்துள்ளன என கருத்து தெரிவித்தனர்.
பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆர்பாட்டகாரர்கள் மத்தில் கூறுகையில் – பதுளை வீதியை அண்டியுள்ள கிராம மக்கள் நீண்ட காலமாக விவசாயம் மற்றும் வாழ்வாதார தொழிலில் ஈடுபடும்போது யானைகளினால் பாதிப்புக்குள்ளாகி வருவதை நாம் அறிவோம். முடிந்தளவு அதனை தடுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்த போதிலும் கட்டுப்படுத்த முடியவில்லை அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தந்துள்ளார்கள் இது தொடர்பாக உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு அகஜர்களை அனுப்பி எதிர்காலத்தில் அந்த மக்களை பாதுகாப்பதற்காகவும் வாழ்வாதாரததை மேற்கொள்ள நடவடிக்கை யெடுக்கப்படும் என்றார்.

