400 ஆபாச வீடியோக்கள்;1900 நிர்வாணப்படங்கள்: காசிக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு   கைதுசெய்யப்பட்ட நாகர் கோயிலைச்  சேர்ந்த காசி என்ற இளைஞனுக்கு  ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

27 வயதான குறித்த இளைஞன்  சுமார் 120 பெண்களை ஏமாற்றி, அவர்களை ஆபாச வீடியோ  எடுத்து அதனை சமூக வலைதலங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள்  இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை அடுத்தே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து காசியைக் கைது செய்த பொலிஸார் ஆறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பொலிஸாரின் விசாரணையில் காசியின் மடிக்கணினியில்  400 ஆபாச வீடியோக்கள் மற்றும் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும்  விதித்து சென்னை விரைவு  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *