பொரலஸ்கமுவை – எம்பில்லவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் இரண்டு மர்மநபர்கள் உட்புகுந்து பணிப்பெண்ணை மிரட்டி, அங்கிருந்த ஒரு கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் கொள்ளையர்களின் தெளிவான உருவத்தோற்றம் அப்பிரதேசத்தில் இருந்த கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு பொதுமக்களிடம் பொலிஸாரினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
