பாணந்துறை கொலையாளி கதிர்காமத்தில் கைது..! samugammedia

கடந்த மே மாதம் 31 ஆம் திகதி பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கதிர்காமம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த போதே சந்தேகநபர் நேற்று செவ்வாய்க்கிழமை (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இளைஞர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் அந்த இளைஞர் ஆடைத் தொழிற்சாலை வளாகத்துக்கு  ஓடியுள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்த கொலையாளி அந்த இடத்துக்குள்  நுழைந்து  வாளால் அந்த இளைஞனை தாக்கியுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *