முல்லைத்தீவில் இயற்கையான முறையில் அமைந்த பாடசாலை அதிபரின் அலுவலகம்..! வைரலாகும் படங்கள்..!samugammedia

இயற்கையான முறையில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை அதிபரின் கடமை அலுவலகத்தின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மு/ சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை எனும் ஆரம்ப பாடசாலையில் உள்ள அதிபர் கடமை அலுவலகம்  முற்றிலும் மாறுபட்ட ஓர் அலுவலக அமைப்பு முறையுடன் விளங்குகின்றது.

அதாவது, பாடசாலை அதிபரின் கடமை அலுவலகமானது முற்று முழுதாக மர வேலைப்பாடுகள் மூலம் இயற்கையான முறையில் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பாடசாலை அதிபரின் கடமை அலுவலகத்தின் அமைப்புக்களை பார்த்த பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *