நீட் தேர்வில் 720/ 720:  தமிழக மாணவன் சாதனை

பல்கலைக் கழகங்களில் மருத்துவத்துறையில் மாணவர்களை இணைப்பதற்கான நீட் பரீட்சையானது, இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி  நடைபெற்றது.

இப்பரீட்சையில் தோற்றுவதற்காக  நாடு முழுவதும் 20 ,87 ,445 பேர் விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 1, 47 ,581 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் இப்பரீட்சையின்  மதிப்பெண்கள் நேற்றைய தினம் வெளியாகின.  அந்தவகையில்  720 க்கு 720 மதிப்பெண்களைப் பெற்று   சென்னையைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர்   தேசிய அளிவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதே சமயம்   இப் பரீட்சையில் முதல் 10 இடங்களில்  தமிழகத்தைச் சேர்ந்த 4  மாணவர்கள்  இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *