அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் பைடன் – ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த ஜனாதிபதியும் செய்யாத அளவிற்கு ஜோ பைடன்  அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை அழிக்க முயன்ற வழக்கில், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டொனாட் ட்ரம்பை  நீதிமன்றம் பிணையில்  விடுவித்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக மியாமி நீதிமன்றத்திற்கு  அவர் ஆஜரான போதே  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரது முன்னாள் உதவியாளர் வால்ட் நவுடாவும் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து   இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரையும், வால்ட் நவுடாவையும்  பிணையில் விடுவித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவர் ”தான்  அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே” தன் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *