திருமலை சென்மேரிஸ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!samugammedia

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட  சென்மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது இன்று  (15) சென்மேரிஸ் பாடசாலையில்  இடம் பெற்றதுடன் இதனை திருகோணமலை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் பரமேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக உலக சுகாதார ஸ்தாபனத்தில் கடமையாற்றும் குணாளன் என்பவரின் முயற்சியின் பயனாக மறைந்த சுரேஸ் குமாரின் நினைவாக கந்தையா தொண்டு நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 200 மாணவ மாணவிகளுக்காக குறித்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  
மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் வறுமை நிலை கல்விக்கு தடை இல்லை என்பதனை வைத்து கற்றல் உபகரணங்களின் பிரதிபலனாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில்  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், மாவட்ட செயலக சமூக சேவை திணைக்கள இணைப்பாளர் த.பிரணவன்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் என   பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *