இலங்கையில் யூரியா உர மூட்டையின் விலை 10 ஆயிரம் ரூபாவாக விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று தொடக்கம் 9 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ரூபாவின் மதிப்பு வலுப்பெற்றிருந்ததுடன் செலவுகளை குறைக்கப்பட்டிருந்தாகவும் அதன் பாலனாகவே இந்த அனுகூலத்தை விவசாயிகள் பெற முடிந்தததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் கிடைக்கவில்லை என்றும்,
இது தொடர்பாக ஏற்கனவே அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
