கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் வர்த்தக துறை முதுமாணியுமான ஏ.பி.மதன் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் கடந்த புதன்கிழமை (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் , ஆளுநர் செயலக செயலாளர் ,சுகாதார அமைச்சின் செயலாளர் , பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

