எதற்காக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது இதற்குத்தான் – கஜேந்திரகுமார் காட்டம்.! samugammedia

ரணில் விக்கிமைசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே, அரச பயங்கரவாதத்தை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்றைய தினமும் கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

ஜனநாயக விரோத செல்வாக்கு இல்லாத தரப்பு, அதிகாரங்களை தக்கவைக்கவேண்டுமாக இருந்தால் அரச பயங்கரவாதத்தை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து, மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கவேண்டும் என்றும் அதனையே மக்கள் ஆணை இல்லாத அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுப்பதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *