ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணையப்போவதாக, அரசாங்கத்திற்கு சார்பான சில ஊடகங்கள் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை செயற்பாட்டாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெரும் செல்வந்தர்களுக்கு சலுகைகளை வழங்கி, நாட்டை வங்குரோத்தடையச் செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே வழியில் அவ்வாறே அதை அமுல்படுத்தி வருகின்றார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் சாதாரண மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை.
இதற்கு சரியான உதாரணம் மின்கட்டணம் அதிகரிப்பு . நாட்டின் வளங்களை கொள்ளையடித்து நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு வந்த தரப்பை, பாதுகாத்து வருவது தற்போதைய ஜனாதிபதியே இத்தகைய மோசமான அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எவ்வகையிலும் கைகோர்க்காது பதவிகள், சலுகைகளுக்காக இந்நாட்டு மக்களை ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டேன் ஜனாதிபதியை நியமித்த தரப்பினர் அமைச்சுப் பதவிகளைக் கோருகின்றனர்.தற்போது அது சூதாட்டமாக மாறியுள்ளது.
