கிழக்கு மாகாண ஆளுநரின் பொதுமக்கள் குறை தீர்க்கும் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.








கிழக்கு மாகாண சபையின் கட்டிடத்தில் இவ் பிரிவானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தமது பிரதேசம் சார்ந்த பிரச்சினைகளை முறையிட்டு தீர்வுகளைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைள்ளது.
இதில் வாரத்திலுள்ள ஏழு நாட்களும் 24 மணித்தியாள சேவை இடம்பெறவுள்ளது. பொதுமக்கள் குறை தீர்க்கும் பிரிவின் அலுவலக தொலைபேசி இலக்கமான 0267500500 என்ற இலக்கத்திற்கு அழைத்து பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநருக்கான இணையத்தளமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










