சிறுதானிய உணவு ஊக்குவிப்புக் கண்காட்சி யாழில் முன்னெடுப்பு!

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது.

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

சிறுதானிய உணவுகளான கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

மேலும், சிறுதானியங்களில் இருந்து எவ்வாறு உணவு தயாரிப்பது என்பதும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
சிறு தாணிய உணவினை வழங்கி தானியங்களை விற்பனை செய்து அவற்றின் ஊடாக ஏற்படும் போஷாக்கு நிலைமைகள் தொடர்பாகவும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *