7 மில்லியன்  ரூபாய் பெறுமதியான மருந்துகள் வழங்கிவைப்பு

கனடியத் தமிழ் பேரவையினால் வவுனியா வைத்தியசாலைக்கு 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான  மருந்துகள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கனடியத் தமிழ் பேரவை ஆண்டுதோறும் தமிழ் கனடியர்களின் நிதியுதவியின் ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான பொருளாதார நெருக்கடியினைக் கருத்தில் கொண்டு   வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு சுமார் 7 மில்லியன் பெறுமதியான மருத்துவப்  பொருட்களை கனடியத் தமிழ் பேரவை வழங்கியுள்ளது.

அந்தவகையில் வவுனியா வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செந்தூர்பதிராஜா, முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், அமைப்பின் பிரதிதலைவர் ரவீனா ராஜசிங்கம், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப்  பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *