நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸைப்  பரிசளித்த விஜய்

12 ஆம் தரப் பரீட்சையில் 600க்கு 600 மதிப்பெண்களைப் பெற்ற  மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் ஒன்றைப்  பரிசளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10 ஆம்  மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப்  பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கத் திட்டமிட்டிருந்தார்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் இன்று நடைபெற்றுவருகிறது.

இவ்விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகளும் , அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றுள்ளனர்.

அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கிவருகிறார்.

இந்நிகழ்வில் உரையாற்றியதன் பின்னர் மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசளிக்க ஆரம்பித்தார்.

அந்தவகையில் முதலாவதாக 12 ஆம் தரத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு சான்றிதழுடன் வைர நெக்லஸ் ஒன்றைப் பரிசளித்தார். நந்தினி அவரது குடும்பத்துடன் வந்து விஜய்யிடம் இருந்து பரிசை பெற்றுக்கொண்டார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *