பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, மகாநாயக்க தேரர்களுடன் இணைந்து, இளம் பிள்ளைகளை பிக்குகளாக நியமிப்பதற்கான   வயது வரம்பில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் ”பிக்குகளாக  மாறிய பின்னர் குழந்தைகளுக்கான பெற்றோரின் கவனிப்பு மறுக்கப்படுவது அவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இதனைக் கருத்திற் கொண்டே இம்முடிவை எடுக்க நாம் முன்வந்தோம்.

குழந்தை உரிமைகள் தொடர்பான சர்வதேச ‘உடன்படிக்கைகளுக்கு’ இணங்க, அத்தகைய வயது வரம்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். “அப்போதைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் காலத்தில் வயது வரம்பு அவசியம் குறித்து பேசப்பட்டது. வயது வரம்பாக 12ஐ அறிமுகப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது ”  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *