சட்ட விரோதமாக முறையில் மரக் குற்றிகள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி மற்றும் சாரதி கைது! samugammedia

நேற்று முன்தினம் ஹட்டன் பொலிசார் மேற்கொண்ட வீதி சோதனையின் போது முறையான அனுமதி பத்திரம் இன்றி 53 மர குற்றிகள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்றைச் சோதனை இட்ட போது 20 மரக் குற்றிகள் ஏற்றிச் செல்ல அனுமதி பத்திரம் வைத்து கொண்டு மேலதிகமாக 33 மரக் குற்றிகள் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக 35 லட்சம் ரூபாய் உறுதி பிணையில் சாரதியையும் பார ஊர்தியை யும் விடுவித்து உள்ளதாகவும் அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் சென்ற 33 மரக் குற்றிகள் குறித்து ஹட்டன் வன இலாகா துறையின் அறிக்கை கோரியுள்ளது.

அந்த அறிக்கை கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மற்றும் சாரதி மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *