நுளம்புக்கடியை தடுக்க பாடசாலை நேரங்களில் குழந்தைகள் கை, கால்களை மறைக்கும் வகையில் நீண்ட ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு தொடர்பான மேல் மாகாண உப குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் கல்வி அமைச்சும் கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இவ்வருடம் 44,500 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
The post பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு நீண்ட ஆடைகள் பரிந்துரை appeared first on Tamilwin Sri Lanka.
