குடும்பதகறாரால் கணவனால் துண்டிக்கப்பட்ட மனைவியின் கால்!

கிரிந்திவெல பிரதேசத்தில் கணவன் மனைவியை தாக்கி காலை துண்டித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மனைவி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் காலை ஒட்ட முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்தில் கிரிந்திவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

துண்டிக்கப்பட்ட கால்

குடும்ப தகராறு காரணமாக கணவனால் தாக்கப்பட்டு கால் துண்டிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் நிலை தொடர்பில் கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பிரியந்த இலேபெரும தெரிவிக்கையில்,

நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் துண்டிக்கப்பட்ட கால் மாற்று சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

The post குடும்பதகறாரால் கணவனால் துண்டிக்கப்பட்ட மனைவியின் கால்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *