5 மாடிக் கட்டடத்தில் தீ பரவல் – மயிரிழையில் உயிர் தப்பிய நபர்! samugammedia

குருநாகல் சதுரஷ மாவத்தையில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டடத்தில் இன்று (20) முற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குருநாகல் மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள், 6 தண்ணீர் பௌசர்கள் மற்றும் மத்திய அதிவேக வீதியின் தீயணைப்பு வாகனமொன்றும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன.

கடும் முயற்சியின் பின்னர் ஒரு மணித்தியாலத்திற்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ பரவும் சந்தர்ப்பத்தில் 3ஆம் மாடியில் ஒருவர் சிக்கியிருந்ததுடன் அங்கிருந்தவர்களின் முயற்சியில் அவர் கீழே குவிக்கப்பட்டிருந்த மெத்தைகள் மீது குதித்து உயிர்தப்பினார்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக குருணாகல் தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *