பொதுஜன பெரமுன கட்சியின் இருப்பு என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைகளிலேயே தங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சிகளிடத்தில் காணப்படுகின்ற முரண்பாடுகளை பயன்படுத்தி கட்சிகளை சின்னாபின்னம் ஆக்குவதில் தொடர்ந்து செயற்படுவதாக அ.ஜோதிலிங்கம் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைகளுக்கு தற்போது பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கட்சி மாறக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டள்ளார்.
எனவே ஜனாதிபதியுடன் பொதுஜன பெரமுன முரண்பட்டாலும் ரணிலுக்கு எதிரான தீர்மானங்களை அவர்கள் எடுக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பொதுஜன பெரமுன கட்சியை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியிடம் இரண்டு கத்தி உள்ளதாகவும்
ஒன்று சர்வதேச போர்க்குற்ற விவகாரம் என்றும் இரண்டாவது நாடாளுமன்றத்தை கலைக்கின்ற அதிகாரம் தற்போது ரணிலிடம் உள்ளதாக அ.ஜோதிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
