முல்லைத்தீவு மாவட்டத்தில் மதங்களிடையேயும் இனங்களிடையேயும் முறுகலைதோற்றிவிக்கும் ஒரு இடமாக குருந்தூர் மலை காணப்படுகின்றது நீதிமன்ற உத்தரவினைமீறியும் கட்டுமானங்கள் கட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
குருந்தூர் மலை விகாரைக்காக தமிழ்மக்களின் பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள நிலையில் காணிகளை விடுவிக்க மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவந்துள்ளார்கள்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன் பில இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்; மலைக்கு பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பில தலைமையிலான பௌத்த மதகுருமார்கள் உள்ளிட்ட குழுவினர்கள் மற்றும் தென்னிலங்கையினை சேர்ந்த ஊடகவியாலள் குழு ஒன்றும் குருந்தூர் மலையில் பிரசன்னமாகி இருந்தார்கள்.
இதன் போது குருந்தூர்;மலைபகுதியில் உள்ள இரண்டு காணி உரிமையாளர்கள் உதயகம்பன்பிலவிற்கு பொங்கல் (பாற்சோறு) கொடுத்து வரவேற்பு செய்துள்ளார்கள் (இவர்கள் இருவரின் காணிகளும் குருந்தூர்மலையில் உள்ளடக்கப்பட்டுள்ளது அதனை விடுவிக்க கோரியுள்ளார்கள்)
இதனைதொடர்ந்து பௌத்த பூசை பொருட்களுடன் மலைக்கு ஏறிய தேரர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட குருந்தூர்மலை விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன் போது சுடர் ஏற்றி மலர்வைத்து ஊதுபத்தி கொழுத்தி வழிபட்டுள்ளார்கள்.
தொடர்ந்து பௌத்தமுறையில் பிரங்க வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு குருந்தூர் மலையில் உள்ள ஏனை இடங்களையும் பார்வையிட்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்.