பகிரங்கமாக வெளியிடப்படும் பெயர் பட்டியல்! இலங்கை மக்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு samugammedia

அஸ்வெஸ்ம நலன்புரி திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நலன்புரி  திட்டத்தின்  மூலம்   நன்மைகளைப்  பெற்றுக் கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான  பயனாளிகளின் பெயர் பட்டியல் இம்மாதம் 20 ஆம் திகதியிலிருந்து பகிரங்கமாக வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி WWW.wbb . gov.lk நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில்  குறித்த பெயர்ப் பட்டியலை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதேச செயலகப்பிரிவு மற்றம் கிராம மட்டத்தில் உள்ள ஏனைய அரச அலுவலகங்களிலும்  இப் பெயர்ப்  பட்டியல் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *