வலஸ்முல்லை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்லை – யஹல்முல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.