இலங்கை இன்று ஊழல் மிக்கதொரு நாடாக சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, பொருட்கள், பணங்கள் கொள்ளையடிக்கப்படுகின்ற சம்பவங்களை இடம்பெறுவதாகவும் அவை வெட்கப்படவேண்டிய செயல் என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து அரச சேவையாளர்களும் ஊழல் வாதிகள் அல்ல என்றும் குறிப்பாக பல அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும்போது பொருட்களை பதுக்கி வைத்து பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களும் உள்ளதாக சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரச தலைவர் நேர்மையானவராக இருக்கவேண்டும் என்றும் அதேபோன்று அரசியல்வாதிகளும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த உத்தேச ஊழல் ஒழுப்பு சட்டமூலம் நிச்சயமாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும் சபையில் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.