பெருந்தொகை கடல் சங்குகளுடன் இருவர் கைது! samugammedia

கற்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3200 கடல் சங்குகளை கற்பிட்டி பொலிஸார் இன்று 21 ஆம் திகதி பிற்பகல் மீட்டுள்ளதாக  கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு அளவிலான கடல் சங்குகள் 40 சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்ததுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் விஷேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கல்பிட்டி பொலிஸ் பரிசோதகர் ஷான் முனசின்ஹ ​​உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 28 வயதுடைய கல்பிட்டியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *