யாழ். தலைமையகப் பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை! samugammedia

பிரதிவாதியான யாழ். தலைமையகப் பொலிஸ் தலைமை அதிகாரியை  எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் விசாரணைக்காக சமூகம் அளிக்குமாறு யாழ். பிராந்திய அலுவலகம் எழுத்து மூலம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிவதாவது,

நபர் ஒருவர் தன்னை குறித்த மேல் அதிகாரி விசாரணைக்காக வருமாறு அழைத்து அச்சுறுத்தல் விடுத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழாக குறித்த முறைப்பாடானது விசாரணை செய்யவுள்ளது.

2023.06.22 திகதி மு.ப. 12.00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்திற்கு (இல.01 3ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்)  பொருத்தமான ஆவணங்களுடன் ஆணைக்குழு முன்னிலையில் சமூகமளிக்க வேண்டும். 

முறைப்பாட்டாளர் பிரதிவாதி சகல சட்ட ரீதியான அறிவுறுத்தல்களையும் அறிவுறுத்துவதற்கு குறித்த தரப்பினர் எழுத்து மூலமான விலாசங்களை, தொலைபேசி இலக்கங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் அது ஆணைக்குழுவின் அதிகாரத்தினை அவமதித்த அல்லது அசௌரவப்படுத்திய குற்றமாகக் கருதப்படும். 

சட்டத்தின் 21 (3) (2) கூற்றின் பிரகாரம் கௌரவ ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட அறிவித்தல் அல்லது எழுத்து மூல அணையை கடைப்பிடிப்பதை அலட்சியப்படுத்தலானது ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு எதிராக அல்லது ஆணைக்குழுவை அசௌரவப்படுத்தும் விதத்தில் அவமானப்படுத்திய குற்றமாக அமையும்.

அது உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு எதிராக செயற்படுத்துவதாக கருதி மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 21 ஆவது சுற்றின் பிரகாரம் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றமாகும் என  வழங்கப்பட்ட அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *