இலங்கையிலுள்ள பெறுமதியான மனித வளங்கள், நாட்டை விட்டு வெளியேறும் நிலை தற்போது அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்த அரசாங்கம் தொழில்சார் நிலையில் உள்ளவர்களுக்கு விதித்த அதிகளவான வரி காரணமாகவே அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
குறிப்பாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வங்கி அதிகாரிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என பல திறமைசாலிகள் இந்த நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இதன் காரணமாக தொழில்சார் வல்லுணர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை டொலரின் பெறுமதி ஒவ்வொரு நாளும் மாற்றம் அடைகின்றது.இதன் பெறுமதியை நிலையாக வைத்திருக்கமுடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் கொவிட் காரணமாக உடைந்து போயிருந்த வர்த்தககர்கள் இன்று மேலும் பாரிய சிரமத்திற்குள் சிக்கியுள்ளனர்.
இன்று இந்த நாட்டில் ஒரு பொருட்களின் விலைகளையும் நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையினை இந்த அரசாங்கமே உருவாக்கியுள்ளது.