பாதி நாள் ஹர்த்தாலும் கடையடைப்பும் இன்று ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. கனேடிய அரசாங்கம் பயங்கரவாத புலிகளுக்கு ஆதரவான செயற்பாட்டை மேற்கொள்கின்றனர் என்று கனேடிய அரசாங்கத்திற்கு எதிராக கல்குடா மக்களால் இவ் எதிர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின குறிப்பாக ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டிருந்தது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை பாதி நேர ஹர்த்தால் கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.பிரதேசத்தின் பெருமளவான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன் பிரதான இடங்களில் கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகள் என்பன கனேடிய அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள் எழுதிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பதாதைகளில் இலங்கை ஒரு இறமை கொண்ட நாடு இந்த விசயத்தை கனேடிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.கனடா உங்கள் சொந்த தொழிலை கவனியுங்கள் நிம்மதியாக வாழ இலங்கையரை விடுங்கள்.உள்ளே விளையாட வேண்டாம்.கனடிய அரசாங்கமே இலங்கையர்களை நிம்மதியாக வாழ அனுமதி.என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இவ் ஹர்த்தால் பயங்கரவாதிகளுக்கு எதிரான கல்குடா மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இது தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
அண்மையில் ககேனடிய பிரதமரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படு கொலை நடைபெற்றதாகவும் அது குறித்து சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பொறுப்புக் கூறல் நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக கனடா தொடர்ந்தும் செயற்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.