இலங்கையில் இணைய வழி பாலியல் சேவை – அறவிடப்படும் பெருந்தொகை பணம்..! அதிர்ச்சித் தகவல் samugammedia

ஹோமகம – கட்டுவான வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் இரகசியமாக பாலியல் சேவை நடத்தி வந்ததாக கூறப்படும் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலிப் பெயரில் இணையதளமொன்றை ஆரம்பித்து, அதில் பெண்களின் புகைப்படங்களை பிரசுரித்து பாலியல் சேவை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சேவையை பெற்றுக் கொள்ளும் நபர் ஒருவரிடமிருந்து சுமார் 6000 ரூபா பெற்றுக்கொள்ளப்படுவதாகவும், புகைப்படத்தை பிரசுரிப்பதற்கு நாள் ஒன்றுக்கு 400 ரூபா பெண்களிடம் அறவீடு செய்யப்படுவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *