ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருந்து விலகி, அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் அரசாங்கத்துடன் இணைந்தால் மகிழ்ச்சி என்றும் மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு தயாராகவே இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பாகவே பழனி திகாம்பரம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசுடன் இணையவுள்ளதாக கடந்த இரு வருடங்களாக தகவல்கள் பரப்பப்பட்டு வந்தாலும் அவ்வாறு நடக்கவில்லை எனவும் திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் கஞ்சன விஜயசேகரவின் இந்த கருத்தை மறுக்கும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று காலை தனது முகநூலில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.