திருமலையில் இடம்பெற்ற சாரணர் பயிற்சி நிகழ்வு..!samugammedia

தி/மூ / இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியில் இன்று சனிக்கிழமை சாரணர் பயிற்சி இடம்பெற்றது.

இலங்கை சாரணியர் அமைப்பின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் பயிற்சி நெறி இடம்பெற்றது.

இதில் மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள 07 பாடசாலைகளைச் சேர்ந்த 243 ஆண்,பெண் மாணவமாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது சாரணர் இயக்கம் பற்றிய விளக்கமும் சாரணர் அமைப்பின் ஆரம்ப பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதில் சாரணர் அமைப்பின் திருகோணமலை மாவட்ட ஆணையாளர் எஸ்.சசிகுமார், உதவி மாவட்ட ஆணையாளர்களான ஆர்.ஜனோஜ், வசந்தகுமார் மற்றும் சாரணத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *