வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு கிளிநொச்சியில் வரவேற்பு..!samugammedia

இந்தியாவில் புதுடில்லியில் கடந்த 18.06.2023 நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்ற மாணவியே இவ்வாறு வரவேற்கப்பட்டார்.
குறித்த போட்டியில் 12 சர்வதேச நாடுகள் பங்குபெற்றிருந்தது. இதில் இலங்கை சார்பில் போட்டியிட்ட தவராசா சானுயா  வெங்கலப்பதக்கத்தினை வென்று கொடுத்துள்ளார்.
அவரை வரவேற்கும் நிகழ்வு 24.06.2023 இன்றையதினம்  கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் ஆசியினை பெற்றதுடன், தொடர்ந்து மாகாதேவா ஆச்சிரமம் முன்றலின் கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *