திருகோணமலைக்கு உரித்தான இயற்கை சொத்தாகிய புள்ளிமான்களை பாதுகாக்கும் நோக்குடன் மான்களை கணக்கெடுக்கும் செயல்முறை இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழிகாட்டலில் இவ் கணக்கெடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை நகரிலுள்ள பிரதான வீதி,கடற்கரை, பூங்காக்கள் போன்றவற்றில் பழங்காலம் தொட்டு புள்ளி மான்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றமை குறிப்பிடத்தக்கது.